மரபுப் பாடல் நெறி

மரபுப் பாடல் நெறி

சீர் பிரிக்கும் நெறிமுறைகள்

சீர் என்பது செய்யுள் அடிகளில் இடம் பெறும் சொல்லாகும். இச்சொல்லைப் பிரிக்கும்பொழுது அதை அசை என்று கூறுவர். அசை, நேரசை / நிரையசை என அமையும்.

நேரசை

1. குறில் தனித்த நேரசை – க

2. குறில் ஒற்று நேரசை – கல்

3. நெடில் தனித்த நேரசை – கா

4. நெடில் ஒற்று நேரசை – கால்

நிரையசை

1. குறிலிணை (இரண்டு குறில்) நிரையசை – நட

2. குறிலிணை ஒற்று நிரையசை – தடம்

3. குறில் நெடில் நிரையசை – பலா

4. குறில் நெடில் ஒற்று நிரையசை – கலாம்

குறிப்பு

1. குறிலுக்கு அடுத்து நெடில் எழுத்து வந்தால் சேர்த்துப் பிரிக்கலாம். (எ.டு) கலா

2. நெடிலுக்கு அடுத்து நெடில் எழுத்து வந்தால் சேர்த்துப் பிரிக்கக் கூடாது

(எ.டு) யாகாவா – யா /கா/ வா

3. நெடிலுக்கு அடுத்து குறில் எழுத்து வந்தால் சேர்த்துப் பிரிக்கக் கூடாது

(எ.டு) வாழி – வா/ ழி

4. நெடில் குறில் எழுத்தின் பின் ஒற்று வரும்பொழுது சேர்த்துப் பிரிக்கலாம்.

எத்தனை ஒற்றெழுத்துக்கள் வந்தாலும் ஓர் ஒற்றெழுத்தாகக் கொள்ள வேண்டும்.

(எ.டு) ஆர்ந்த – ஆர்ந் / த

நேரிசை அகவல்பா ( ஆசிரியப்பா)

1. அகவல்பாவில் ஒருவகை நேரிசை அகவல்பா

2. இந்த அகவல்பாவில் எல்லா அடியும் அளவடியாக (நான்கு சீர்) அமையும்

3. ஈற்றயலடி (இறுதி அடிக்கு முன் அமையும் அடி) மட்டும் சிந்தடியாக (மூன்று சீர்) அமையும்.

சான்று (ஐங்குறுநூறு – 203)

அன் /னாய் வா /ழி! வேண் /டன் /னை நம் /படப் /பைத்

நே நே நே நே நே நே நே நே நி நே

தேன் /மயங் /கு பா /லினும் இனி /ய அவர் /நாட் /டு

நே நி நே நே நி நி நே நி நே நே

உவ /லைக் கூ /வல் கீ /ழ

நி நே நே நே நே நே

மா /னுண்ஃடு எஞ் /சிய கழி /லி நீ /ரே

நே நே நே நே நி நி நே நே நே

குறிப்பு:

1. அகவல்பா மூன்றடி முதல் ஆயிரம் அடி அல்லது அதற்கு மேலும் அமையலாம்

2. 1,2, 4 ஆவது அடிகளில் நான்கு சீர், 3ஆவது அடியில் மூன்று சீர்

குறள் வெண்பா

1. வெண்பாவில் ஒரு வகை

2. இரண்டடி கொண்டது

3. முதல் அடி நான்கு சீர், இரண்டாம் அடி மூன்று சீர்

4. திருக்குறளின் இறுதிச்சீர் (ஏழாவது சொல்) நாள், மலர், காசு, பிறப்பு என்ற ஒன்றைக் கொண்டு முடிய வேண்டும்.

சான்று (திருக்குறள் 391)

கற் /க கச /டறக் கற் /பவை கற் /றபின்

நே நே நி நி நே நி நே நி

நிற் /க அதற் /குத் தக

நே நே நி நே மலர்

குறிப்பு

1. மலர் – நிரை (தக என்பதும் நிரை)

2. நாள் – நேர்

3. கா / சு – நேர் நேர்

4. பிறப் /பு – நிரை நேர்

நேரிசை வெண்பா

1. வெண்பாவில் ஒரு வகை

2. நான்கு அடியாக அமையும்

3. இரண்டாம் அடியில் இறுதிச் சீர் (நான்காவது சீர்) தனிச்சீராக (தனிச்சொல்) அமையும்.

4. முதல் மூன்று அடிகளில் நான்கு சீர். நான்காவது அடியில் மூன்று சீர்.

சான்று

உரை /முடி /வு கா /ணான் இள /மையோன் என் ஃற

நி நி நே நே நே நி நே நே நே நே

நரை /முது மக் /கள் உவப் /ப – நரை /முடித் /துச்

நி நி நே நே நி நே நி நி நே

சொல் ஃலால் முறைஃசெய் ஃதான் சோஃழன் குலஃவிச் ஃசை

நே நே நி நே நே நே நே நி நே நே

கல் /லா /மல் பா /கம் படும்.

நே நே நே நே நே நி

குறிப்பு

1. முதல் மூன்று அடிகள் நான்கு சீர்; நான்காவது அடி மூன்று சீர்

2. உரைமுடிவு, நரைமுது, நரைமுடித்து ஆகிய சொற்கள் இயைபுச் சொற்களாக இருத்தல்

3. சொல்லாமல், கல்லாமல் ஆகியவையும் இயைபு பெற்றிருத்தல்